பின்னாடி நிக்க சொல்லு சனியன..பதிவான அஸ்வின் கூறிய வார்த்தை (வீடியோ)
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் அஸ்வின், சாம்சன் தமிழில் பேசிய வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்துள்ளனர்.
ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் 24வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 196 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய குஜராத் அணி 16.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அந்த ஓவரை அஸ்வின் வீசும்போது பீல்டிங் செட் செய்தார். அப்போது அவர் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் 'பின்னாடி நிக்க சொல்லு அந்த சனியன' என்று கூற, சாம்சன் 'பின்னாடி இரு டா டேய்' என்று மற்றொரு வீரரிடம் கூறுகிறார்.
Ash: Konjam pinnadi nikka solra anda saniyana
— Ragav シ︎ (@Ragav_Tweetz) April 12, 2024
Sanju: pinnadi nilra dai
??? @ashwinravi99
pic.twitter.com/XJrtmRuhxq
இவர்கள் பேசியது ஸ்டம்பில் இருந்து மைக்கில் பதிவாகியது. ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை பகிர, அஸ்வின் கூறிய அந்த வீரர் குல்தீப் சென் தான் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட தமிழக வீரர்கள் அவ்வப்போது தமிழில் உரையாடுவதும், அது மைக் பதிவாவதும் பலமுறை நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |