2 பெண் குழந்தைகளின் தந்தையாக... ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு உள்ளான பள்ளி மாணவிகள் தொடர்பில் தமிழக வீரர் அஸ்வின் கண்டனம்
சென்னையில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சென்னை கே.கே நகரில் இயங்கி வரும் பத்மசேஷாத்ரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில், அந்த பள்ளியின் பழைய மாணவனாக மட்டுமின்றி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாகவும் குழப்பமான இரவுகளை கழித்தேன்.
ராஜகோபாலன் என்பது இன்று வெளிவந்த ஒரு பெயர், ஆனால் எதிர்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க, நாம் செயல்பட வேண்டும் மற்றும் அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை என பதிவிட்டுள்ளார்.
Been a couple of disturbing nights, not only as an old student of PSBB but also as a father of 2 young girls.
— Mask up and take your vaccine???? (@ashwinravi99) May 25, 2021
Rajagopalan is one name that’s come out today, but to stop such incidences all around us in the future, we need to act and need a complete overhaul of the system.
?? pic.twitter.com/JRKZ3QOgeM