இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகும் தமிழ்நாட்டு வீரர்?
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளருக்கு ராகுல் டிராவிட், தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிசீலனையில் உள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர்
2022 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கல்லம்.

சமீபத்தில் அவுஸ்திரேலியா உடனான ஆஷஸ் தொடர், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் என அடுத்தது இங்கிலாந்து டெஸ்ட் அணி மோசமாக செயல்பட்டு வந்த நிலையில், டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மெக்கல்லம் விலகியுள்ளார்.
அதேவேளையில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக மெக்கல்லம் தொடர்கிறார்.
அடுத்த டெஸ்ட் பயிற்சியாளருக்கான தேடலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், இந்த போட்டியில் இந்திய ஜாம்பவான்களின் பெயர்கள் அடிபடுகின்றன.
அஸ்வின், டிராவிட்டிற்கு வாய்ப்பு
முன்னாள் இந்திய வீரரான, தமிழ்நாட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

இவருக்கு பயிற்சியாளராக அனுபவம் இல்லாவிட்டாலும், சர்வதேச போட்டியில் உள்ள சிறந்த அனுபவம் காரணமாக பரிசீலனை பட்டியலில் உள்ளார்.
இதே போல், மற்றொரு முன்னாள் இந்திய வீரரான ராகுல் டிராவிட்டின் பெயரும் பரிசீலனையில் உள்ளது.

டிராவிட் பயிற்சியாளராக இருந்த போது, இந்திய அணி 2024 T20 உலககிண்ணத்தை வென்றது.
மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆண்டி பிளவர் பெயரும் பட்டியலில் உள்ளது.

இவர் தற்போது RCB அணியின் பயிற்சியாளராக உள்ள நிலையில், தொடர்ந்து 2 முறை அந்த அணி ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது.
மேலும், இங்கிலாந்து முன்னாள் அணித்தலைவர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன், முன்னாள் அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |