48 மணிநேரத்திற்கு முன்பே நான் இல்லை என்று எனக்கு தெரியும்: WTC இறுதிப்போட்டி குறித்து மௌனம் கலைத்த அஸ்வின்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம்பெறாதது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் மனம் திறந்துள்ளார்.
அவுஸ்திரேலியா சாம்பியன்
சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணியை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. இது கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் கண்டனங்களை பெற்றது.
மனம் திறந்த அஸ்வின்
இந்த நிலையில் தற்போது அஸ்வின் WTC இறுதிப்போட்டியில் இடம்பெறாதது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், 'WTC இறுதிப்போட்டியில் விளையாட விரும்பினேன். ஏனென்றால் நாங்கள் அங்கு செல்வதில் நான் ஒரு பங்கைக் கொண்டிருந்தேன். கடந்த இறுதிப்போட்டியில் கூட நான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினேன், அதுவும் சிறப்பாகவும் பந்துவீசினேன்.
48 மணிநேரத்திற்கு முன்பே நான் வெளியேறப் போகிறேன் என்று எனக்குத் தெரியும். அதனால் எனக்கு, எனது முழு குறிக்கோளும் நான் தோழர்களுக்கு பங்களிப்பதை உறுதிசெய்து, பட்டத்தை வெல்ல எங்களுக்கு உதவ வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
PTI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |