அவுட் பின் நாட்-அவுட்..மீண்டும் ரிவியூ கேட்ட அஸ்வின்! கிரிக்கெட் வரலாற்றில் அரிய நிகழ்வு
TNPL தொடரின் நேற்றைய ஆட்டத்தில் துடுப்பாட்ட வீரர் மற்றும் பந்துவீச்சாளர் இருவரும் ஒரே பந்தில் ரிவியூ கேட்ட அரிய நிகழ்வு நடந்தது.
அஸ்வின் அணி வெற்றி
கோவையில் நேற்று நடந்த TNPL போட்டியில் திருச்சி மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. இதில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மிரட்டலாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளும், கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் திருச்சி அணி துடுப்பாடியபோது அஸ்வின் 13வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் ராஜ்குமார் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
2 reviews in one ball, one by batter and one by bowler (Ashwin).
— Johns. (@CricCrazyJohns) June 14, 2023
Rarest of incident in world cricket. pic.twitter.com/jB1zZ9qcmw
இருமுறை ரிவியூ
நடுவர் உடனே அவுட் கொடுக்க அவர் ரிவியூ கேட்டார். அதில் பந்து துடுப்பில் படவில்லை என தெரிந்ததால், கள நடுவர் நாட் அவுட் என்று அறிவித்தார்.
அப்போது அஸ்வின் உடனே ரிவியூ கேட்டார். எனவே மீண்டும் ஆராயப்பட்டது. அதில் துடுப்பு தரையில் பட்டதும், பந்து படாமல் சென்றதும் தெளிவாக தெரிந்தது.
இதனால் நாட் அவுட் என்று நடுவர் மீண்டும் தீர்ப்பளித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |