ஒரே பந்தில் 14 ஓட்டங்கள் விளாசிய வீரர்! வைரலாகும் மிரட்டல் வீடியோ
டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் சஞ்சய் யாதவ் ஒரே பந்தில் 14 ஓட்டங்கள் விளாசிய வீடியோ வைரலாகி வருகிறது.
சேப்பாக் அபார வெற்றி
கோவையில் நேற்று நடந்த TNPL போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சை ஆடிய சேப்பாக் அணி 217 ஓட்டங்கள் குவித்தது. சேலம் அணியின் கேப்டன் அபிஷேக் தன்வர் 20வது ஓவரை வீசினார்.
The most expensive delivery ever? 1 Ball 18 runs#TNPLonFanCode pic.twitter.com/U95WNslHav
— FanCode (@FanCode) June 13, 2023
கடைசி பந்தில் மூன்று நோ பால்
அந்த ஓவரின் கடைசி பந்தில் சேப்பாக் வீரர் சஞ்சய் யாதவ் கிளீன் போல்டு ஆனார். ஆனால் அது நோ பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் அவர் கடைசி பந்தை வீச, அதனை சஞ்சய் சிக்ஸருக்கு விளாசினார்.
அந்த பந்தும் நோ பால் ஆனது. எனவே, அவர் வீசிய அடுத்த பந்தில் சஞ்சய் 2 ஓட்டங்கள் எடுத்தார். துரதிர்ஷ்டவசமாக அந்த பந்தும் நோ பால் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் அவர் Wide பந்தாக வீசினார். ஒரு வழியாக கடைசி பந்தை தன்வர் வீச, சஞ்சய் சிக்ஸருக்கு அடித்து இன்னிங்சை முடித்து விட்டார்.
தன்வர் வீசிய ஒரே பந்தில் சேப்பாக் அணிக்கு 18 ஓட்டங்கள் கிடைத்தது. அதில் 14 ஓட்டங்கள் சஞ்சய் விளாசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |