விளையாட்டின் ஆன்மாவுக்கு எதிரானதா? ஆஷஸில் சர்ச்சைக்குரிய அவுட் குறித்து அஸ்வின் தடாலடி கருத்து
Sivaraj
in கிரிக்கெட்Report this article
ஆஷஸ் டெஸ்டில் பேர்ஸ்டோவின் ரன் அவுட் சர்ச்சையானது குறித்து தமிழக வீரர் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
பேர்ஸ்டோவின் சர்ச்சை விக்கெட்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவ், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியினால் ரன் அவுட் செய்யப்பட்டார்.
இது கிரிக்கெட் உலகில் சர்ச்சையாக உருவெடுத்தது. ரசிகர்களில் பலர் பேர்ஸ்டோவின் விக்கெட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Getty Images
அஸ்வின் கருத்து
இந்நிலையில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுகுறித்து கூறுகையில், 'ஒரு விடயத்தை எல்லோரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். போட்டியில் தனிப்பட்ட வீரர் திறமையுடன் செயல்படுவதை பாராட்ட வேண்டுமே தவிர, விளையாட்டின் ஆன்மாவுக்கு எதிரான செயல், நியாயமற்றது என திசை மாற்றக் கூடாது!
பேர்ஸ்டோ செய்ததைப் போல, துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக பந்தை விட்டுவிட்டு கிரீஸில் இருந்து வெளியே வரும் செயலில் ஈடுபடும்போது தான், கீப்பர் பந்தை ஸ்டம்புகளில் அடிப்பார்' என்று தெரிவித்துள்ளார்.
AP Photo/Altaf Qadri
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |