அவர் எனக்கு போட்டியான வீரர் தான்..ஆனால் நான் கேலி செய்யவில்லை - விராட் கோலி
இந்திய வீரர் விராட் கோலி, ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி
லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்தை 43 ஓட்டங்களில் வீழ்த்தியது. சிக்ஸர்கள் விளாசி 155 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் முயற்சி வீணானது.
அதே சமயம் 110 மற்றும் 34 ஓட்டங்கள் இரு இன்னிங்சிலும் எடுத்த அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
Reuters
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில், 'நான் விளையாடியதில் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த வீரர் என்று பென் ஸ்டோக்ஸை கேலி செய்யவில்லை. மிக உயர்ந்த தரமான இன்னிங்ஸ், ஆனால் தற்போது அவுஸ்திரேலியா மிகவும் சிறப்பாக உள்ளது' என கூறியுள்ளார்.
I wasn’t joking about calling Ben Stokes the most competitive bloke I’ve played against. Innings of the highest quality but Australia is too good at the moment ?
— Virat Kohli (@imVkohli) July 2, 2023
News 18
இந்த பதிவின் மூலம் ஸ்டாக்ஸை அவர் பாராட்டியுள்ளாரா அல்லது புகழ்ந்துள்ளாரா என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |