ஆஷஸ் டெஸ்டில் சிக்ஸர் மழை! வெற்றிக்காக தனியாளாய் போராடிய கேப்டன்..சொந்த மண்ணில் பறிபோன வெற்றி
ஆஷஸ் இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
போராடிய கேப்டன் ஸ்டோக்ஸ்
லார்ட்ஸில் நடைபெற்ற பரபரப்பான ஆஷஸ் 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிக்காக போராடியது. குறிப்பாக, அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனியொருவனாய் நின்று, சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
94 ஓட்டங்களில் இருந்தபோதும் அவர் பயமில்லாமல் சிக்ஸர் அடித்து சதத்தினை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் அவரது வேகத்தை அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
We're back at it after lunch...
— England Cricket (@englandcricket) July 2, 2023
And so is Ben Stokes ? #EnglandCricket | #Ashes pic.twitter.com/qvDHoQxiBy
சிக்ஸர் மழை
சிக்ஸர் மழை பொழிந்த ஸ்டோக்ஸ் அதிரடியாக 150 ஓட்டங்கள் எட்டினார். ஆனால், அவர் 155 ஓட்டங்களில் இருந்தபோது கேரியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்தின் வெற்றி மங்கியது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் விக்கெட்டுகளும் சரிந்தன. இறுதியில் கடைசி விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்ற, இங்கிலாந்து 327 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் தலா 3 விக்கெட்டுகளும், கிரீன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
Twitter (England Cricket)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |