விக்கெட் கீப்பருக்கு அதிர்ச்சி கொடுத்த விக்கெட் கீப்பர்! சூடு பிடித்த ஆஷஸ் டெஸ்ட்
ஆஷஸ் 2வது டெஸ்டில் இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோ அவுட் ஆன விதம் அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
371 ஓட்டங்கள் இலக்கு
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் ஆஷஸ் 2வது டெஸ்ட் லார்ட்ஸில் நடந்து வருகிறது. கடைசி நாளான இன்று அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 371 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடி வருகிறது.
பென் டக்கெட் 83 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பினர்.
Twitter (ICC)
ஸ்டோக்ஸ் அரைசதம்
எனினும் அரைசதம் அடித்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ், அணியின் வெற்றிக்காக போராடி வருகிறார். இங்கிலாந்து இன்னிங்சின் 52வது ஓவரை கிரீன் வீசினார்.
அந்த ஓவரின் கடைசி பந்து தாக்குவது போல் வந்ததால், துடுப்பாட்ட வீரர் ஜானி பேர்ஸ்டோ குனிந்தார். அதனால் பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது.
Twitter (ICC)
அதிர்ச்சி ரன் அவுட்
இதன் காரணமாக ஓவர் முடிந்தது என நினைத்து பேர்ஸ்டோவ் கிரீஸை விட்டு வெளியே சென்றார். உடனே விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்டம்பை நோக்கி பந்தை த்ரோ செய்தார்.
பேர்ஸ்டோவ் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதன் பின்னர் மூன்றாம் நடுவர் அவுட் என அறிவித்தார். இதனால் இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
விக்கெட் கீப்பரான பேர்ஸ்டோவை அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கேரி அவுட் செய்த சுவாரசிய நிகழ்வு இந்த டெஸ்டில் நடந்துள்ளது.
#Ashes pic.twitter.com/YdsYJizsdO
— cricket.com.au (@cricketcomau) July 2, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |