அனல் களத்தில் 2 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்ட வீரர்! ஆஷஸ் தொடரில் அதகளம்
ஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பென் டக்கெட் 2 ஓட்டங்களில் சதத்தினை தவறிவிட்டார்.
அவுஸ்திரேலியா 416
லார்ட்ஸில் நடந்து வரும் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அனல் பறக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் மோதி வருகின்றன.
அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஸ்டீவன் ஸ்மித் 110 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 77 ஓட்டங்களும் விளாசினர்.
ராபின்சன் மற்றும் டங் தலா 3 விக்கெட்டுகளும், ஜோ ரூட் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Twitter (@englandcricket)
பென் டக்கெட் 98 ஓட்டங்களில் அவுட்
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜக் கிரேவ்லே 48 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஒலி போப் 42 ஓட்டங்களில் கிரீன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
மறுமுனையில் அரை சதம் கடந்த பென் டக்கெட், 98 ஓட்டங்களில் இருந்தபோது துரதிர்ஷ்டவசமாக ஹேசல்வுட் ஓவரில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
Twitter (@englandcricket)
இதனால் டெஸ்டில் தனது 3வது சதத்தினை அவர் தவறவிட்டார். ஜோ ரூட் 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி தற்போது வரை 4 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |