தனது முதல் ஆஷஸ் டெஸ்டிலே வார்னரை அலறவிட்ட வீரர்! பெய்ல்ஸ் பறந்த வீடியோ
Sivaraj
in கிரிக்கெட்Report this article
ஆஷஸ் இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங், அவுஸ்திரேலிய தொடக்க வீரர்களை வீழ்த்தி மிரட்டினார்.
இங்கிலாந்து பந்துவீச்சு தெரிவு
இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் 25 வயது வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங் தனது முதல் ஆஷஸ் தொடரில் களமிறங்கினார்.
அவரது வேகப்பந்து வீச்சில் உஸ்மான் கவாஜா 17 ஓட்டங்களில் இருந்தபோது போல்டானார். பந்தை அடிக்காமல் தவிர்க்க நினைத்து மட்டையை அவர் தூக்கியபோது, மின்னல் வேகத்தில் வந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.
First Ashes wicket secured ?
— England Cricket (@englandcricket) June 28, 2023
Masterful from Josh Tongue ✨ #EnglandCricket | #Ashes pic.twitter.com/pS963Awgop
வார்னர் போல்டு
கவாஜாவின் விக்கெட்டுக்கு பின் அரைசதம் அடித்திருந்த டேவிட் வார்னர் 66 ஓட்டங்களில் இருந்தபோது டங் ஓவரில் போல்டு முறையில் அவுட் ஆனார். டங்கின் ஸ்விங் பந்தைப் பார்த்து மிரண்ட வார்னர், விரக்தியுடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
ஜோஷ் டங் தனது முதல் ஆஷஸ் தொடரிலேயே இரு மிரட்டல் வீரர்களை போல்டு முறையில் வெளியேற்றியதை சக அணி வீரர்கள், ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர்.
Warner GONE! ?
— England Cricket (@englandcricket) June 28, 2023
S̶t̶u̶a̶r̶t̶ ̶B̶r̶o̶a̶d̶ Josh Tongue gets his man! #EnglandCricket | #Ashes pic.twitter.com/3sw6FSU2To
அவுஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித் 85 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 11 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |