கடைசி நாளை எட்டிய ஆஷஸ் முதல் டெஸ்ட்! நங்கூரமாய் களத்தில் நிற்கும் வீரர்
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மேலும் 174 ஓட்டங்கள் தேவை என்பதால், கடைசி நாளான இன்று மிகுந்து எதிர்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இங்கிலாந்து நிர்ணயித்த இலக்கு
பர்மிங்காமில் நடைபெற்று முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 273 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால் அவுஸ்திரேலிய அணிக்கு 281 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் வார்னர் 36 ஓட்டங்கள் எடுத்து ராபின்சன் பந்துவீச்சில் வெளியேறினார்.
Broady is on one here... ?
— England Cricket (@englandcricket) June 19, 2023
He entices Steve Smith into the drive and he's nicked it!
Australia 3 down ? #EnglandCricket | #Ashes pic.twitter.com/QFTdSrkzN0
பிராட் மிரட்டல் பந்துவீச்சு
அடுத்து லபுசாக்னே (13), ஸ்டீவன் ஸ்மித் (6) சொற்ப ஓட்டங்களில் பிராட் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட அவுஸ்திரேலியா, நைட் வாட்ச்மேன் ஆக போலண்ட்-ஐ களமிறக்கியது.
நேற்றைய ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்தது. கவாஜா 34 ஓட்டங்களுடனும், போலண்ட் 13 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்னும் அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு 174 ஓட்டங்கள் தேவை. அதே சமயம் இங்கிலாந்துக்கு 7 விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இன்றைய நாள் ஆட்டத்திற்கு காத்திருக்கின்றனர்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |