அனல் பறக்கும் ஆஷஸ் டெஸ்ட்! சதமடித்ததும் மட்டையை வீசிய வீரர் குறித்து ரிக்கி பாண்டிங் கருத்து
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவின் இன்னிங்ஸ் குறித்து முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
முதலில் நாளில் டிக்ளேர்
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஆஷஸ் டெஸ்ட் பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாளிலேயே 8 விக்கெட் இழப்புக்கு 393 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
A magnificent 💯 from Usman Khawaja 😍
— Sony Sports Network (@SonySportsNetwk) June 17, 2023
The south-paw fights against all odds to get Australia back in the game 👊#SonySportsNetwork #RivalsForever #ENGvAUS #Ashes2023 pic.twitter.com/yaz1Y7gIt1
மட்டையை வீசிய கவாஜா
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலியா அணி 386 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. உஸ்மான் கவாஜா 141 ஓட்டங்கள் விளாசினார்.
அவர் சதம் அடித்தபோது தனது மட்டையை உற்சாக மிகுதியில் வீசினார். இது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
ICC/Twitter
ரிக்கி பாண்டிங் கருத்து
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், 'நேர்மையாக கூற வேண்டும் என்றால், கவாஜாவின் சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்று நான் நினைக்கிறேன். ஊடகங்களின் பார்வையில் உஸ்மான் இங்கிலாந்துக்கு வருவது குறித்து சில கேள்விக்குறிகள் இருந்தன.
இங்கிலாந்தில் அவரது சாதனை அவர் விரும்பிய இடத்தில் இல்லை மற்றும் உலகின் பிற பகுதிகளால் உள்ளதைப் போல நிச்சயமாக சிறப்பாக இல்லை.
ஒரு துடுப்பாட்ட வீரர் ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தபோது, உண்மையில் அவரது மட்டையை காற்றில் வீசுவதை நான் பார்த்திருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பார்த்த அனைவரும் அவர் விளையாடிய விதத்தில் ஈர்க்கப்பட்ட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.
Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |