1100வது விக்கெட்டை வீழ்த்திய ஆண்டர்சன்! புதிய மைல்கல்
ஆஷஸ் டெஸ்டின் மூன்றாவது நாளில் விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய மைல்கல்லை எட்டினார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய மைல்கல்
இங்கிலாந்து - அவுஸ்திரேலியா அணிகள் மோதி வரும் ஆஷஸ் முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
வார்னர், லபுசாக்னே சொதப்பிய நிலையில் டிராவில் ஹெட் 50 ஓட்டங்கள் விளாசினார். மறுமுனையில் நங்கூரம் போல் நிலைத்து நின்ற கவாஜா சதத்தினை கடந்து விளையாடி வருகிறார்.
இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட், மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளும், கேப்டன் ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்திய நிலையில் அனுபவ வீரர் ஆண்டர்சன் ஒரு விக்கெட் எடுக்க போராடினார்.
Jimmy Anderson. GOAT. ?
— England Cricket (@englandcricket) June 18, 2023
The King of Swing gets First Class wicket number 1️⃣1️⃣0️⃣0️⃣! ?
Alex Carey departs for 66.#EnglandCricket | #Ashes pic.twitter.com/5oVD7jfKij
இந்த தொடரில் முதல் விக்கெட்
ஒருவழியாக அவுஸ்திரேலியாவின் ஸ்கோர் 338 ஆக இருந்தபோது, ஆண்டர்சன் ஓவரில் 66 ஓட்டங்களில் இருந்த அலெக்ஸ் கேரி போல்டானார்.
இந்த விக்கெட் மூலம் முதல்தர போட்டியில் 1100 விக்கெட்டுகள் எனும் புதிய மைல்கல்லை ஆண்டர்சன் எட்டினார்.
180 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 686 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இதில் 32 முறை ஒரே இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ICC (Twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |