மூவர் இல்லாமலே தொடரை வென்ற அவுஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் - அஸ்வின்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவுக்கு, தமிழக வீரர் அஸ்வின் வாழ்த்து தெரிவித்தார்.
ஆஷஸ்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Image: AFP
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவுஸ்திரேலியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஸ்வின் வாழ்த்து
அவர் தனது பதிவில், "அவுஸ்திரேலியா கம்மின்ஸ் (1 டெஸ்ட் மட்டுமே விளையாடினார்), ஹேசல்வுட் மற்றும் லயன் இல்லாமலேயே 4-1 என்ற கணக்கில் ஆஷஸை வென்றது. வாழ்த்துகள் அவுஸ்திரேலியா.
ஒரு அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்காக உஸ்மான் கவாஜாவுக்கு வாழ்த்துகள். இங்கிலாந்து அணியிடம் இருந்து சில சமயங்களில் சிறப்பான ஆட்டத்தின் வெளிப்பாடுகள் தெரிந்தன.
ஆனால், அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் போட்டியிடவோ அல்லது வெற்றி பெறவோ அது போதுமானதாக இல்லை.
சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. இங்கிலாந்து அணிக்கு ஒரு சிறப்புப் பாராட்டு. அவர்கள் எப்போதும் போல அற்புதமாக இருந்தனர், இறுதிவரை தங்கள் அணிக்கு ஆதரவளித்தனர்" என தெரிவித்துள்ளார்.
Image: William West/AFP
Australia win the Ashes 4-1 without Cummins( played 1 test ), Hazlewood and Lyon.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) January 8, 2026
Well done Australia👏👏
Congratulations to @Uz_Khawaja on a wonderful career👏👏
There were glimpses of brilliance from England, but not enough to compete or win a test series down under.
Loads…
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |