ஐபிஎல் போட்டியில் வேண்டுமென்றே ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறிய அஸ்வின்! வைரல் வீடியோ
ஐபிஎல் போட்டியில் பேட்டிங் விளையாடி கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அஸ்வின் திடீரென களத்தில் இருந்து ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறிய வீடியோ வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் நேற்று மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஸ்வின் ரிட்ட்யர்ட் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் ஐபிஎல்லில் ரிட்டயர்ட் அவுட் ஆகி வெளியேறும் முதல் வீரர் என்ற பெயருக்கு அவர் சொந்தக்காரர் ஆனார்.
Ashwin, retired out, but played his part. ?? pic.twitter.com/p1hD9xAVL7
— Harish Jangid (@HarishJ56732474) April 10, 2022
அஸ்வின் 28 ரன்கள் எடுத்திருந்த போதே ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். அஸ்வின் ரன்கள் குவிக்கும் வேகம் குறைவாக இருந்ததால், அவரை மாற்றிவிட்டு இளம் வீரர் ரியான் பராக்கை களத்துக்கு ராஜஸ்தான் அணி அனுப்பியது.
எனினும் ரியான் பராக் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்,