அஸ்வினின் மாயாஜாலத்தில் போல்டு! குழம்பி நின்ற மே.தீவுகள் கேப்டன் (வீடியோ)
டிரினிடாட் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பிராத்வெயிட் 75 ஓட்டங்களில் அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
முதல் விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா
குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்க்ஸை ஆடி வருகிறது.
தொடக்க வீரர் தேஜ்நரைன் சந்தர்பால் 33 ஓட்டங்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் கிர்க் மெக்கென்சி 32 ஓட்டங்களில் முகேஷ் குமார் ஓவரில் இஷன் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இது முகேஷ் குமாருக்கு முதல் டெஸ்ட் விக்கெட் ஆகும்.
What a dream delivery by Ravi Ashwin!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 22, 2023
A peach to remove Kraigg Brathwaite. pic.twitter.com/JPsuQWp1Eq
பிராத்வெயிட் நங்கூர ஆட்டம்
மற்றொரு தொடக்க வீரரும், அணியின் கேப்டனுமான கிரேஜ் பிராத்வெயிட் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். அணியின் ஸ்கோர் 157 ஆக உயர்ந்தபோது அஸ்வினின் மாயாஜால பந்தில் பிராத்வெயிட் போல்டு ஆனார்.
அவர் ஒரு கணம் எப்படி அவுட் ஆனேன் என்று குழம்பினார். மொத்தம் 235 பந்துகளை எதிர்கொண்ட பிராத்வெயிட், ஒரு சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 75 ஓட்டங்கள் எடுத்தார்.
The Skipper leans into the runs. This is his 29th Test half century.
— Windies Cricket (@windiescricket) July 22, 2023
Live Scorecard⬇️https://t.co/CyZJAEWnXa#WIHome #RallywithWI pic.twitter.com/PKnBIvhep8
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |