என்னால் உதவ முடியவில்லை! இதயம் நொறுங்கியது..தமிழக வீரர் அஸ்வின் வேதனை
நேற்று இரவு இந்திய அணியின் தோல்வியால் இதயம் நொறுங்கியது என தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு களத்தில் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்திய அணி உலகக்கோப்பையை இழந்ததால் வருத்தமடைந்த அஸ்வின், தனது எக்ஸ் பக்கத்தில் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Getty Images
அவரது பதிவில், 'வலிமையான இதயம் நேற்று இரவு நொறுங்கிப் போனது. இந்த தொடரில் அணியில் இருந்த ஒவ்வொருவருக்கும் நினைவில் கொள்ள வேண்டிய தருணங்கள் உள்ளன. விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை குறிப்பிட வேண்டும்.
எனினும் என்னால் உதவ முடியவில்லை. ஆனாலும் நவீன கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் ஜாம்பவான்களை பாராட்டலாம். நேற்று அவர்கள் களத்தில் செய்தது நம்ப முடியாதது. அவர்களின் 6வது உலகக்கோப்பை வெற்றிக்கு வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.
Mighty mighty heartbreak last night? ?.
— Ashwin ?? (@ashwinravi99) November 20, 2023
Everyone in the team had several days to remember during this campaign?? and special mentions to @imVkohli @MdShami11 @ImRo45 and @Jaspritbumrah93 ??.
However I can’t help but applaud the giants of modern day cricket “Australia”.…
ANI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |