அவருக்கு ரெட் கார்டு கொடுங்க! கிண்டல் செய்த அஸ்வினுக்கு பதில் கூறிய ஆப்கான் வீரர்
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தசைப்பிடிப்பு என நடித்த ஆப்கானிஸ்தான் வீரரை, இந்திய அணி வீரர் அஸ்வின் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் வெற்றி
செயிண்ட் வின்சென்ட்டில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் முக்கிய கட்டத்தில் ஆப்கான் வீரர் குல்பதின் நைப் தசைப்பிடிப்பு எனக் கூறி கீழே விழுந்ததும், பின்னர் பந்துவீசி விக்கெட் வீழ்த்தியதையும் ஒப்பிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அஸ்வின் கிண்டல்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இதனை குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளப்பதிவில்,
''குல்பதின் நைப்பிற்கு ரெட் கார்டு கொடுங்கள்'' என கால்பந்து விளையாட்டில் செயல்படுத்தப்படும் நடைமுறையை சுட்டிக்காட்டினார்.
அவரது இந்த பதிவிற்கு குல்பதின் நைப் தனது டீவீட்டில், ''சில சமயம் மகிழ்ச்சியிலும், சில சமயம் சோகத்திலும் தசைப்பிடிப்பு ஏற்படும்'' என பதில் கொடுத்துள்ளார்.
Kabi khushi kabi gham main huta hai ??
— Gulbadin Naib (@GbNaib) June 25, 2024
Hamstring ? https://t.co/48jV4ESpuS
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |