உங்களுக்கே அப்படினா…எனக்கு 200-300 மடங்கு வேதனை: மனம் திறந்த அஸ்வின்
உலக கோப்பையை தவறவிட்டதில் ரசிகர்களை விட 200-300 மடங்கு அதிகமான சோகத்தில் நாங்கள் இருப்பதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வேதனை தெரிவித்துள்ளார்.
உலக கோப்பையை தவறவிட்ட இந்தியா
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் படுமோசமாக தோல்வி அடைந்து தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
சூப்பர் 12 சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கோப்பையை இந்திய அணி நிச்சயமாக வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Indian cricket team - இந்திய கிரிக்கெட் அணி
அத்துடன் உலக கோப்பை தோல்வியை தொடர்ந்து, சீனியர் வீரர்கள் என்று பார்க்காமல் அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் சமூக வலைதளங்களில் இந்திய அணிக்கு எதிரான ஏகப்பட்ட கருத்துகள் வெளிவர தொடங்கியுள்ளது.
அஸ்வின் வேதனை
இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டி20 உலக கோப்பை தோல்வி குறித்து அவரது youtube சேனலில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வெல்லவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனை தந்திருக்கும் என்பதை ஒப்புக் கொள்கிறேன், அதே வேளையில் ரசிகர்களாகிய உங்களுக்கு எவ்வளவு சோகம் இருக்கிறதோ, அதை விட இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களாகிய எங்களுக்கு 200-300 மடங்கு அதிகமான வேதனை உள்ளது என தெரிவித்துள்ளார்.
Ravichandran Ashwin - ரவிச்சந்திரன் அஸ்வின்
அத்துடன் தோல்விக்காக எந்தவொரு காரணம் கூற முடியாது, இருப்பினும் அதிலிருந்து நாம் முன்னேறி கடந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த உலக கோப்பை தொடரை மோசமான ஒன்றாக கருத முடியாது, இப்படிப்பட்ட மிகப் பெரிய தொடரில் அரையிறுதி வரை முன்னேறி இருப்பதே பெரிய காரியம் தான் என்று பேசியுள்ளார்.