அஷ்வினுக்கு அழைப்பு விடுத்துள்ள அவுஸ்திரேலியா கிரிக்கெட் - BBL தொடரில் இணைகிறாரா?
BBL தொடரில் விளையாட அஷ்வின் அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஷ்வின் ஐபிஎல் ஓய்வு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடி வந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அஷ்வின், வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட உள்ளதாக அறிவித்தார்.
இதனையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ILT20 தொடர் ஏலத்திற்கு தனது பெயரை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
BBL தொடரில் அஷ்வின்
இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஸ்(Big Bash)T20 லீக் தொடரில், அஷ்வினை விளையாட வைப்பதற்காக அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
வரும் டிசம்பர் 14 ஆம் திகதி, பிக்பாஸ் T20 லீக் தொடர் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏலம் ஏற்கனவே முடிந்து விட்டது. இருந்தாலும், 8 அணிகளும் அவரை தங்கள் அணிக்குள் கொண்டு வர ஆர்வம் காட்டி வருகிறது.
பிக்பாஸ் தொடரில், அஷ்வின் பங்கு பெறுவதன் மூலம், எதிர்காலத்தில் பல்வேறு இந்தியா வீரர்கள் இந்த தொடரில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட், ஐபிஎல், முதல்தர கிரிக்கெட் என இந்தியா கிரிக்கெட்ட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற வீரர்களை மட்டுமே வெளிநாட்டு கிரிக்கெட் லீக்கில் கலந்து கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |