கலகலப்பாக சக வீரர்களுடன் பேசிய அஸ்வின் - வைரலாகும் வீடியோ
சக வீரர்களுடன் அஸ்வின் கலகலப்பாக பேசிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கலகலப்பாக பேசிய வீரர் அஸ்வின்
கிரிக்கெட் விரர் அஸ்வின் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 36 வயதாகிறது. ஆனால், இவர் சக வீரர்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு திறமையோடு விளையாடி வருகிறது. டெஸ்ட் அணிகளில் மட்டும் அல்லாது, டி20 கிரிக்கெட் போட்டிகளின் தன்னுடைய தனித்திறமையை நிரூபித்து வருகிறார் அஸ்வின்.
இதுவரை 350 டி20 போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடிய அஸ்வின் 300 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
மேலும், அஸ்வின் 193 ஐபிஎல் போட்டி விளையடியுள்ளார். அதில், 170 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். தற்போது, ஐபிஎல் தொடரில் விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் மலிங்காவின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சக வீரர்களுடன் கலகலப்பாக பேசி மகிழ்ந்துள்ளார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Hahaha ! Thanks for your Contribution @Jaseholder98 ??. @ybj_19 ?? #HallaBolKonjamNallaBol pic.twitter.com/y86W8anqZM
— Ashwin ?? (@ashwinravi99) May 3, 2023