பாதுகாப்பு அச்சுறுத்தல்... ஆயுதங்கள் வாங்கிக்குவிப்பதில் திடீர் ஆர்வம் காட்டும் ஆசிய நாடுகள்
சமீப காலமாக சில ஆசிய நாடுகளில் ஆயுதங்கள் மற்றும் ஆராய்ச்சிக்கான செலவு அதிகரித்து வருகிறது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
தங்கள் சொந்த பாதுகாப்புத் தொழில்களை மேம்படுத்த முயற்சிக்கும் அதே வேளையில், தங்கள் வெளிநாட்டு தொழில்துறை கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதன் மூலம் நெருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கும் இதனூடாக பதிலளிப்பதாக புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் சமீபத்திய மோதல்கள், மோசமடைந்து வரும் அமெரிக்க-சீனா உறவு மற்றும் ஆசிய-பசிபிக் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களே பாதுகாப்பு-தொழில்துறை கூட்டாண்மைகளின் எழுச்சிக்கு வழிவகுத்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2022 மற்றும் 2024 க்கு இடையில் பாதுகாப்பு கொள்முதல் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான செலவு 2.7 பில்லியன் டொலர் என அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவை செலவிடும் தொகை 10.5 பில்லியன் டொலர்களை எட்டியது.
மேலும், ஆசிய-பசிபிக் நாடுகள் இன்னும் பெரும்பாலான முக்கிய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளன. நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் முதல் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறைக்கான மேம்பட்ட மின்னணுவியல் வரை உள்ளன.
பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்
அத்துடன் தொழில்நுட்ப பரிமாற்றம், கூட்டு முயற்சிகள் மற்றும் உரிமம் பெற்ற கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் ஐரோப்பிய நிறுவனங்கள் ஒரு முக்கிய மற்றும் விரிவடையும் பிராந்திய இருப்பைக் கொண்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகமானது சீனாவின் NORINCO ஆயுத நிறுவனம் மற்றும் இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
கூட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் எப்போதும் எளிதானவை அல்ல என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை தயாரிப்பதில் ரஷ்யாவுடனான இந்தியாவின் இரண்டு தசாப்த கால ஒத்துழைப்பிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரஷ்யா சீனாவுடன் நெருக்கமானால் இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையின் புதிய மேம்படுத்தலுக்கு அது சிக்கலாக முடியும். குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட சூப்பர்சோனிக் வகைக்கு என ரஷ்யா சீனாவை நாடினால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |