பந்துவீச்சில் மிரட்டிய ஷர்துல் தாக்கூர்: இந்தியா அணிக்கு வெற்றி இலக்கை நிர்ணயித்த வங்கதேசம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 266 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
வெற்றி இலக்கு நிர்ணயம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதி வருகின்றனர்.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் குவித்தது.
வங்கதேச அணியில் அதிகப்பட்சமாக அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 85 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 80 ஓட்டங்கள் குவித்தார்.
அவரை தொடர்ந்து டவ்ஹித் ஹ்ரிடோய் 81 பந்துகளில் 54 ஓட்டங்களும், நாசூம் அகமது 45 பந்துகளில் 44 ஓட்டங்களும் குவித்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், முகமது சமி 2 விக்கெட்டுகளையும் குவித்து அசத்தினர்.
இந்திய அணிக்கு 266 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களத்தில் இறங்கியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |