விமான பயணிகளின் பைகளில் பணத்தை திருடும் பாதுகாப்பு அதிகாரிகள்: சிசிடிவி காட்சியில் சிக்கிய இருவர்
அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையத்தில் காவல் அதிகாரிகள் இரண்டு பேர் பயணிகளின் பைகளில் இருந்து பணங்களை திருடும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சிக்கிய காவலர்கள்
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் பைகளில் இருந்து இரண்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் பணங்களை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகளின் பைகள் சோதனை சாவடிக்கு வரும் போது அவர்களது பைகளில் இருந்து 2 பாதுகாப்பு நிர்வாக அதிகாரிகள் பணத்தை எடுத்தது தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பான சிசிடிவி கண்காணிப்பு காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகளும் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டனர்.
இருவரும் தீவிரமான திருட்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நிலையில், அவர்கள் தங்களை குற்றமற்றவர்கள் என தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |