ஈரான் மீதான பொருளாதார தடை தொடரும்: பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி முக்கிய முடிவு
ரஷ்யாவிற்கு பாலிடிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஈரான் தொடர்ந்து வழங்கி வருவதால் ஈரான் மீதான பொருளாதார தடைகளை தொடர்வதாக பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
ரஷ்யாவிற்கு உதவும் ஈரான்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் ரஷ்ய வீரர்கள் ஈரானின் பாலிடிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலான நேரங்களில் உக்ரைனிய பிராந்தியங்களுக்கு ரஷ்யா நடத்தும் ட்ரோன் தாக்குதல்கள் ஈரானிய ட்ரோன்கள் மூலமாகவே நடத்தப்படுகிறது.
REUTERS
இந்நிலையில் ஈரான் மீதான சில பொருளாதார தடைகள் அடுத்த மாதம் நீக்கப்படவுள்ள நிலையில், ரஷ்யாவிற்கு ஈரான் ஆயுத உதவி வழங்கி வருவதை குறிப்பிட்டு ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்காமல் தொடரப்போவதாக பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
ஒப்பந்தத்தை மீறிய ஈரான்
கடந்த 2015ம் ஆண்டு P5+1 என அழைக்கப்படும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் கூட்டு விரிவான செயல் திட்டம் (JCPOA) என்ற ஒப்பந்தத்தில் ஈரான் தன்னை இணைத்து கொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பொருளாதார தடைகளை நீக்க ஈரான் குறைந்த அளவில் அணு சக்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சர்வதேச ஆய்வாளர்களை சுதந்திரமான சோதனை நடத்த அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டது.
AFP
அத்துடன் ஈரான் எத்தகைய ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வாங்கவோ விற்கவோ அந்த ஒப்பந்தம் தடை விதித்து இருந்தது.
இந்நிலையில் ஒப்பந்தத்திற்கு ஈரான் முழுமையாக இணங்கும் வரை அதன் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார தடையை நீக்க போவது இல்லை என்று E3 என அழைக்கப்படும் பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
E3-யின் இந்த முடிவு JCPOA மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ஐ தெளிவாக மீறுவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |