வியட்நாம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 56 பேர் உயிரிழப்பு
வியட்நாம் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
வியட்நாமில் தீ விபத்து
வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் 9 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தின் போது கட்டிடத்தில் மக்கள் அதிக அளவு இருந்ததால் பலர் உயிர் பிழைக்க பெரும் போராட்டம் நடத்தினர். இருப்பினும் தீ காயத்தால் பாதிக்கப்பட்ட 56 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
மீட்பு பணி தீவிரம்
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் இருந்த 150க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்க போராடினர்.
அடுக்குமாடி கட்டிடம் குறுகிய சந்தி பகுதியில் அமைந்து இருந்ததால் தீயணைப்பு வாகனங்கள் தீ பற்றிய பகுதிக்கு அருகில் செல்ல முடியாமல் நின்றது.
இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்க போராடினர். இந்த தீ விபத்தில் மேலும் 37 பேர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |