இந்தியா vs பாகிஸ்தான்: அபிஷேக் ஷர்மா - ஹாரிஸ் ரவூப் மோதல்., மைதானத்தில் பதற்றம்
ஆசிய கிண்ணம் 2025 சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது, இந்திய தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்தியா ஆடிய இரண்டாவது இன்னிங்சின் ஐந்தாவது ஓவரில், இருவரும் பலமுறை வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.
இறுதியில், நடுவர் காசி சோஹெல் தலையிட்டு பதற்றத்தை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த ஓவரின் கடைசி பந்தில் ஷுப்மன் கில் ஒரு அழகான பவுண்டரியை அடித்தார். அதன்பின் அபிஷேக் ஹாரிஸிடம் ஏதோ கூற, ஹாரிஸ் விரல் சுட்டி காட்டி பதிலளித்தார். இதனால் மோதல் மேலும் தீவிரமடைந்தது.
இதற்கு முந்தைய ஓவர்களில் ஷுப்மன் கில்லும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹீன் அபிரிடியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்த பதற்றமான சூழ்நிலையிலும் அபிஷேக் ஷர்மா 24 பந்துகளில் அரைசதம் அடித்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை வழங்கினார்.
ஷுப்மன் கில்லுடன் சேர்ந்து 105 ஓட்டங்கள் எடுத்து நல்ல கூட்டணியை அமைத்தனர்.
Abhishek Sharma and Shubhman gill lafda with joker Haris Rauf. #INDvPAK
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) September 21, 2025
Abhi & gill owned whole Pakistani jokers.🤡😂 pic.twitter.com/0thtCotFUH
இந்தியா 172 ஓட்டங்கள் இலக்கை 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
போட்டியின் வெற்றியும்.மோதல்களும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India vs Pakistan, Asia Cup 2025, Abhishek Sharma Haris Rauf clash