இந்தியா பாகிஸ்தான் 3 முறை நேருக்கு நேர் மோத வாய்ப்பு - ஆசிய கிரிக்கெட் கோப்பை திகதி அறிவிப்பு
ஆசிய கிரிக்கெட் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் 3 முறை நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கோப்பை 2025
ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலால் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிரிக்கெட் கோப்பையை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஓமன் ஆகிய 8 அணிகள் மோதவுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள மோதல் காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா அணி கிரிக்கெட் விளையாடுவதில்லை.
இதன் காரணமாக, கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின்போது, இந்தியா ஆடிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தன. இதனால், பாகிஸ்தானும் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட மறுத்துள்ளது.
திகதி, இடம் அறிவிப்பு
இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டி நடந்து தொடர்பாக,, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் டாக்காவில் நேற்று ஆலோசனை நடத்தினர். இதில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ஆசிய கோப்பை செப்டம்பர் 9 முதல் 28 ஆம் திகதி வரை, ஹைபிரிட் முறையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. முழு அட்டவணை விரைவில் வெளியாகும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவருமான மொஹ்சின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
3 முறை நேருக்கு நேர்
இதில், ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் அணிகளும், பி பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஓமன் அணிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், லீக் போட்டிகளில் ஒருமுறையும், அதில் முதல் இரு இடங்களை பிடித்தல் சூப்பர் ஓவரில் ஒருமுறையும், அதிலும் முதல் இரு அணிகளும் முதல் 2 இடத்தில் இருந்தால் இறுதிப்போட்டியில் என இந்தியா பாகிஸ்தானுடன் 3 முறை நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது.
ஜூலை 20 ஆம் திகதி WCL தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த போட்டி இந்திய வீரர்களின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னர், ஆசிய கோப்பையில் முதல் முறையாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |