முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்த வீரர்! ஜெய்ஸ்வால், சுதர்ஸன் டக்அவுட் (வீடியோ)
ஓல்ட் டிராஃபோர்ட் டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
669 ஓட்டங்கள்
மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ஓட்டங்கள் குவித்துள்ளது.
Chris Woakes! 🔥
— England Cricket (@englandcricket) July 26, 2025
A heart-in-mouth moment for Joe Root who nearly fumbles... but the man of the hour holds on and we have our first!
🇮🇳 0️⃣-1️⃣ pic.twitter.com/Z0EMNiAMSt
ஜோ ரூட் 150 ஓட்டங்களும், பென் ஸ்டோக்ஸ் 141 ஓட்டங்களும் விளாசினர். ஜடேஜா 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி 311 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
முதல் ஓவரின் 4வது பந்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) ஆட்டமிழந்தார். வோக்ஸ் ஓவரில் அவரது துடுப்பில் உரசிய பந்து ரூட்டிடம் கேட்ச் ஆக தஞ்சம் புகுந்தது.
ரசிகர்களுக்கு அதிர்ச்சி
அடுத்து வந்த சாய் சுதர்ஸன், தான் சந்திந்த முதல் பந்திலேயே ஹாரி புரூக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
TWO IN TWO!
— England Cricket (@englandcricket) July 26, 2025
Nicked straight to Harry Brook. WHAT A START! 🤯
🇮🇳 0️⃣-2️⃣ pic.twitter.com/qbokPo7iKj
இதனால் இந்திய அணி ஓட்டங்கள் எடுக்காமலேயே முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இது அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மறுபுறம் கிறிஸ் வோக்ஸ் (Chris Woakes) இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கையூட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |