ஆசிய கோப்பை கிரிக்கெட் - போட்டி நேரங்களில் மாற்றம்; என்ன காரணம்?
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்
ஆசிய கோப்பை வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 27 வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ளது.
இதில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் பங்கேற்க உள்ளது.
இந்த போட்டிகள் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குவதாக திட்டமிட்டபட்டிருந்தது. இந்திய நேரப்படி இரவு 7;30 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
போட்டி நேரம் மாற்றம்
அங்கு அதிகளவில் வெப்பம் நிலவுவதால், பார்வையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க, அனைத்து போட்டிகளும் 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து போட்டிகளும் உள்ளூர் நேரப்படி 6;30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற உள்ள ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையேயான போட்டி, மாலை 5 மணிக்கு திட்டமிட்டுள்ளதால் அந்த போட்டி நேரத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி, செப்டம்பர் 14 ஆம் திகதி நடைபெற உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |