ஆசிய கிண்ணம் 2025: ஹரிஸ் ரவூப், சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் 30 சதவீதம் அபராதம்
ஆசிய கிண்ணம் 2025 தொடரில் ICC விதிமுறைகளை மீறியதற்காக ஹரிஸ் ரவூப் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Asia Cup 2025 T20 தொடரின் Super 4 சுற்றில், செப்டம்பர் 21-ஆம் திகதி நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப் ரசிகர்களிடம் தவறான சைகைகள் காட்டியதற்காக ICC விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்டார்.
இதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை ICC போட்டி நடுவர் Richie Richardson மேற்கொண்டார்.
போட்டியின்போது, இந்திய ரசிகர்கள் அவரை கிண்டலடித்ததற்கு பதிலளிக்க ஹரிஸ் ரவூப் "6-0" என சைகை காட்டினார். மேலும் விமானம் வீழ்த்தும் சைகையம் செய்தார்.
இது மே மாதத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட இராணுவ மோதலுக்கான குறிப்பு என கருதப்படுகிறது.
இதேபோன்று, பாகிஸ்தான் பேட்டர் சாஹிப்சாதா பர்ஹான் தனது அரைசதத்தை கொண்டாடும்போது, துப்பாக்கியால் சுடுவது போல் சைகை செய்தார். அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ICC.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், செப்டம்பர் 14-ஆம் திகதி நடந்த குழு போட்டிக்கு பிறகு, இராணுவ மோதலை குறிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக ICC கூறியுள்ளது. அவருக்கும் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒருவர்மீது ஒருவர் புகார் அளித்துள்ளன. மூவரும் குற்றசாட்டை ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் இடையில் பல மோதல்கள் ஏற்பட்டன. நாணயசுழற்சியின் போது காய் குலுக்க மறுத்தத்திலிருந்து, பந்துவீச்சு நேரத்தில் ஏற்பட்ட பதற்றம் வரை போட்டி பரபரப்பாக இருந்தது. இறுதிப்போட்டியில் மீண்டும் இந்த இரு அணிகளும் மோதவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Asia Cup 2025, ICC Fined Haris Rauf, Suryakumar Yadav fined, ICC Code Breach, India vs Pakistan