ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற இந்திய அரசு திட்டம்
2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் ரூ.ரூ.6.77 லட்சம் கோடி கடன் பெற இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய அரசு, ரிசர்வ் வங்கி (RBI) ஆலோசனையின் பேரில், 2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதிக்கான கடன் திட்டத்தை முடிவுசெய்துள்ளது.
மொத்தமாக ரூ.ரூ.6.77 லட்சம் கோடி மதிப்பிலான பத்திரங்கள் மூலம் சந்தையில் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ரூ.10,000 கோடி Sovereign Green Bonds (SGrBs) எனப்படும் பசுமை பாத்திரங்களும் அடங்கும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கடன் தொகை, 2026 மார்ச் 6 வரை 22 வாராந்திர ஏலங்கள் மூலம் பெறப்படும். 3, 5, 7, 10, 15, 30, 40 மற்றும் 50 ஆண்டுகள் காலக்கெடுவில் பத்திரங்கள் வழங்கப்படும்.
முக்கிய பத்திரங்களின் பங்குகள்:
3-ஆண்டு பத்திரம் - 6.6%
5-ஆண்டு பத்திரம் - 13.3%
7-ஆண்டு பத்திரம் - 8.1%
10-ஆண்டு பத்திரம் - 28.4%
15-ஆண்டு பத்திரம் - 14.2%
30-ஆண்டு பத்திரம் - 9.2%
40-ஆண்டு பத்திரம் - 11.1%
50-ஆண்டு பத்திரம் - 9.2%

அமெரிக்க கனவுக்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் செல்லும் 500 ஆண்டுகள் பழமையான கோவில் - பூஜை, காணிக்கை தேவையில்லை
அதேசமயம், அரசின் வருவாய் மற்றும் செலவுகளுக்கு இடையிலான தற்காலிக இடைவெளிகளை சமாளிக்க, ரிசர்வ் வங்கி ரூ.50,000 கோடி அளவிலான Ways and Mean Advances (WMA) வரம்பை நிர்ணயித்துள்ளது.
2025-26 நிதியாண்டில் மூன்றாம் காலாண்டில், Treasury Bills மூலம் வரைந்திட ரூ.19,000 கோடி கடன் பெறப்படும். இதை 91 நாட்கள் - ரூ.7000 கோடி, 182 நாட்கள் - ரூ.6000 கோடி, 364 நாட்கள் - ரூ.6000 கோடி என பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இந்தியாவின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், பசுமை வளர்ச்சிக்கும் ஆதரவாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India FY26 borrowing, Sovereign Green Bonds, Reserve Bank of India, Indian Government, RBI borrowing plan