பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி - வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை

Afghanistan
By Karthikraja Sep 24, 2026 02:43 PM GMT
Report

asian game silver medalist trained as male in afganistan ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை ஃபரிபா ஹாஷிமி, பழமைவாத சூழல் காரணமாக ஆண் வேடமிட்டு பயிற்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை

20வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் செப்டம்பர் 19 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், பெண்களுக்கான தனிநபர் சாலைப் பந்தயத்தில் ஃபரிபா ஹாஷிமி(Fariba Hashimi) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி - வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை | Asian Game Medalist Trained As Male In Afghanistan

இதன் மூலம், 2002 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் முதல் ஆப்கானிஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை ஃபரிபா ஹாஷிமி பெற்றுள்ளார்.

தற்போது 23 வயதான ஹஷிமி, 9 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2017 ஆம் ஆண்டில் தான் முதன்முறையாக சைக்கிள் ஒட்டக் கற்றுக்கொண்டுள்ளார். 

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாதவன் மகன் - 0.22 வினாடியில் பறிபோன வாய்ப்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாதவன் மகன் - 0.22 வினாடியில் பறிபோன வாய்ப்பு

அவர் தன் அக்கா யுல்துஸ் ஹாஷிமியுடன் சேர்ந்து , ஃபர்யாப் பகுதியில் நடக்கவிருந்த ஒரு பந்தயத்திற்கான விளம்பரத்தைப் பார்த்தாள்.

அதன் பின்னர், பக்கத்து வீட்டில் உள்ளவர்களின் சைக்கிளை இரவல் வாங்கி, சைக்கிள் ஓட்ட பயிற்சி எடுத்துள்ளனர்.

ஆண் வேடமிட்டு பயிற்சி

ஆப்கானிஸ்தானில் நிலவிய பழமைவாதச் சூழலால் பெண்கள் போட்டிகளில் பங்கேற்க எதிர்ப்பு எழும் என்பதால், தலைமுக்காடுகள், முகமூடிகள் மற்றும் சூரியக்கண்ணாடிகள் ஆண் போல் மாறுவேடமிட்டு ஃபரிபா முதலிடத்தைப் பிடித்தார். அவரது அக்கா யுல்தூஸ் இரண்டாமிடத்தை பிடித்தார். 

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி - வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை | Asian Game Medalist Trained As Male In Afghanistan

அதை தொடர்ந்து அவர்களுக்கு சைக்கிள் மீதான ஆர்வம் அதிகரித்தாலும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக போலியான ஆண் பெயர்கள் மற்றும் ஆடைகள் என ஆண் வேடமிட்டே தங்கள் அடையாளங்களை மறைத்து, அப்பகுதியில் இரகசியமாகப் பந்தயங்களில் ஈடுபட்டு வந்தனர்.

மக்கள் அவர்களை கண்டறிந்த பின்னர், ரயிலில் செல்லும் போது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடந்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், அந்தச் சகோதரிகளின் விடாமுயற்சியையும் திறமையையும் அங்கீகரிக்கும் விதமாக, ஆப்கானிஸ்தானின் தேசிய மகளிர் சைக்கிள் ஓட்ட அணி, அவர்களைத் தங்கள் அணியில் சேர அழைப்பு விடுத்தது.

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி - வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை | Asian Game Medalist Trained As Male In Afghanistan

ஆனால், 2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் நிலைமை தீவிரமடைந்து பெண்கள் மீது கடுமையான அடக்குமுறை செலுத்தப்பட்டது.

அந்தச் சகோதரிகள் சைக்கிள் ஓட்டுதலில் கொண்டிருந்த ஈடுபாடு, இத்தாலிய ஒலிம்பிக் வீராங்கனையான அலெஸாண்ட்ரா கேப்பெல்லோட்டோவுடன் அவர்களுக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது.

அவரின் உதவியுடன் இருவரும் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி இத்தாலிக்கு சென்றனர்.

இத்தாலியில், இரு சகோதரிகளுக்கும் ஒலிம்பிக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி உதவிகள் கிடைத்தன. 

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி - வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை | Asian Game Medalist Trained As Male In Afghanistan

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில், ஆப்கானிஸ்தான் கொடியின் கீழ் போட்டியிட்ட 6 விளையாட்டு வீரர்களில், ஃபரிபாவும் யுல்தூஸும் இருவர் ஆவர்.

இது குறித்து பேசிய ஃபரிபா ஹாஷிமி, "அடுத்த தலைமுறை நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதையும் நான் விரும்பவில்லை. அடுத்த தலைமுறையினர் நாட்டிலிருந்தே வந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட்டு, உலகைச் சுற்றிப் பார்த்து, பதக்கங்களை வெல்லும் வகையில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் என்று நான் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US