18 வயது பெண்ணை மணக்க மாட்டேன் என உதறிவிட்டு 83 வயதான போலாந்து நாட்டு பெண்ணை மணந்த 28 வயது ஆசிய இளைஞர்!

marriage love pakistan poland agegap
By Raju Nov 19, 2021 10:20 AM GMT
Report

பாகிஸ்தானை சேர்ந்த 28 வயதான இளைஞன், போலாந்து நாட்டை சேர்ந்த 83 வயதான பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஹபீஸ் முகமது நடீம் (28) என்ற இளைஞரும், ப்ரோமா (83) என்ற பெண்ணும் பேஸ்புக் மூலம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நட்பானார்கள். இருவருக்கும் 55 வயது வித்தியாசம் உள்ள நிலையில் இந்த நட்பானது காதலாக மாறியது.

இந்த ஆறு ஆண்டில் இருவரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதலித்துள்ளனர். இருவருக்குமே தங்களின் தாய் மொழி மட்டுமே தெரிந்த நிலையில் ஆங்கிலம் பேச தெரியாது. இதையடுத்து மொழிபெயர்ப்பு செயலி மூலமே இருவரும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டனர்.

இந்த நிலையில் முகமது - ப்ரோமா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி ப்ரோமா விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வந்தார். அங்கு இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் அவர்களுக்கு திருமணம் நடந்தது.

18 வயது பெண்ணை மணக்க மாட்டேன் என உதறிவிட்டு 83 வயதான போலாந்து நாட்டு பெண்ணை மணந்த 28 வயது ஆசிய இளைஞர்! | Asian Man Age 28 Married Poland 83 Year Old Women

முகமதை மணப்பதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறிய ப்ரோமோ தனது பெயரை பாத்திமா என மாற்றி கொண்டார். 

இந்த நிகழ்வின் போது பாத்திமா தனது கைகளில் மருதாணியுடன் பாரம்பரியத்துடன் பிரகாசமான சிவப்பு நிறத்தில் திருமண ஆடையை அணிந்திருந்தார்.

மேலும் இஸ்லாமிய சட்டப்படி மனைவியாகும் மணப்பெண்ணுக்கு, மணமகன் கட்டயமாக ஒரு கட்டணத்தை பணமாக கொடுக்க வேண்டும், அதை பாத்திமாவுக்கு முகமது கொடுத்தார்.

முகமது ஐந்து நாட்களுக்கு முன்னர் 18 வயதான உறவுக்கார பெண்ணை திருமணம் செய்யவிருந்தார், ஆனால் அப்பெண்ணை மணக்க முடியாது என கூறிவிட்டு பாத்திமாவை மணந்து கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், என் மனைவியின் கூந்தல் அழகு, முகம் அழகு, கைகள் அழகு, கால்கள் அழகு. எல்லாமே அழகு. நாங்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறோம். நாங்கள் 24 மணி நேரமும் திருமணத்தைப் பற்றி பேசி கொண்டிருந்தோம்.

விசா பிரச்சனைகள் தொடர்பாக திருமணம் நடந்ததா என்று கேட்கிறார்கள், எனக்கு சொந்த தொழில் இருப்பதால் அப்படி எதுவும் இல்லை என கூறினார். பாத்திமா கூறுகையில், நான் அவரை பற்றிய எல்லா விடயங்களையும் நேசிக்கிறேன் என கூறியுள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US