அமெரிக்காவில் தன்னை தாக்கியவரை திருப்பித் தாக்கிய ஆசிய நாட்டுப் பெண்மணி... தற்போது செய்துள்ள நெகிழ வைக்கும் செயல்
அமெரிக்காவில் சமீப காலமாக ஆசிய நாட்டவர்கள் மீதான வெறுப்பைக் காட்டும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவரும் நிலையில், தன்னைத் தாக்கிய ஒருவரை சீனப்பெண்மணி ஒருவர் கட்டையால் சரமாரியாக திருப்பித் தாக்கிய சம்பவம் கவனம் ஈர்த்தது.
கடந்த புதன்கிழமை, Xiao Zhen Xie (76) என்ற சீனப்பெண்மணி, சான் பிரான்சிஸ்கோவில் சாலையைக் கடப்பதற்காக நின்றுகொண்டிருந்திருக்கிறார். அப்போது Steven Jenkins (39) என்பவர், திடீரென Xiaoவின் முகத்தில் குத்தியிருக்கிறார்.
அந்த நபர் குத்தியதில் கண்ணில் காயம்படவே, கோபத்தில் பக்கத்தில் கிடந்த கட்டை ஒன்றை எடுத்து அவரை வெளுத்துவாங்கிவிட்டார் Xiao.
அந்த நபரை Xiao சாத்திய சாத்தில், பொலிசார் அவரை ஸ்ட்ரெச்சர் ஒன்றில் வைத்து தூக்கிச் செல்ல, அப்போதும் ஆதங்கம் தாங்காமல், ஏய், நான் சும்மாதானே நின்றேன், என்னை ஏன் வம்புக்கிழுக்கிறாய் என கோபமும் அழுகையுமாக Xiao கதறும் காட்சியைப் பார்த்தபோது, அவர் எந்த அளவுக்கு மன வேதனைப்பட்டிருப்பார் என்பதை நன்றாக புரிந்துகொள்ளமுடிந்தது.
அப்போது Xiaoவைத் தாக்கிய Jenkins, அவரைத் தாக்குவதற்கு முன் Ngoc Pham (83) என்ற மற்றொரு சீனரையும் தாக்கியிருக்கிறார். அவர் இரத்தம் வடிய தரையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன.
Xiaoவால் நையப் புடைக்கப்பட்ட Jenkins மட்டுமின்றி, அவரால் தாக்கப்பட்ட Xiao மற்றும் Pham ஆகிய மூவருமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
Xiaoவின் குடும்பம், அவரது மருத்துவ செலவுகளுக்காக பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தது.
மக்கள் அள்ளிக்கொடுத்ததால், இதுவரை சுமார் ஒரு மில்லியன் டொலர்கள் (920,000) குவிந்துள்ளன.
இதற்கிடையில், தன் பாட்டியான Xiaoவைப் பார்க்கச் சென்றுள்ளார், அவரது பேரனான John Chen. அவர் தற்போது ஒரு முக்கிய விடயத்தை வெளியிட்டுள்ளார்.
தன் பாட்டியான Xiao, தன்னிடம், தன் உடல் நிலையிலும் மன நிலையிலும் மன நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகவே, தனக்காக சேகரிக்கப்பட்ட 920,000 டொலர்களை, ஆசிய அமெரிக்க சமுதாயத்துக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இனவெறிக்கு எதிராக போராட அந்த தொகையை செலவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ள Xiao, தனது பிரச்சினையைவிட அதுதான் பெரிய பிரச்சினை என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், Xiaoவை தாக்கிய Jenkinsஐ பொலிசார் கைது செய்து காவலில் அடைத்துள்ளார்கள்.


