Mukesh Ambaniயை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் பெரும் கோடீஸ்வரர் ஆன Gautam Adani
ஆசியாவின் மிகப்பாரிய பணக்காரர் என்ற பெருமையை கவுதம் அதானி (Gautam Adani) மீண்டும் பெற்றுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை தோற்கடித்து இந்த நிலையை அடைந்துள்ளார். மேலும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.
2024 தொடங்கியதும் Adani Groups தலைவர் கவுதம் அதானியின் அதிர்ஷ்டமும் மாறியுள்ளது. ஆண்டின் முதல் நான்கு நாட்களில், அவரது சொத்து மதிப்பு 13.3 பில்லியன் டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ. 4,29,354 கோடி) அதிகரித்துள்ளது.
மேலும் அவர் மீண்டும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் வேகமாக ஏறத் தொடங்கியுள்ளார்.
Bloomberg Billionaires Indexன் படி, வியாழன் அன்று, அவரது சொத்து மதிப்பு 7.67 பில்லியன் டொலர் அதிகரித்து 97.6 பில்லியன் டொலரை (இலங்கை பணமதிப்பில் ரூ. 31,50,753 கோடி) எட்டியது. இந்நிலையில், கவுதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 12வது இடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை தோற்கடித்து மீண்டும் ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தை அதானி பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானி 97 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் ஆசியாவில் இரண்டாவது இடத்துக்கும், உலகளவில் 13வது இடத்துக்கும் சரிந்துள்ளார்.
கடந்த ஆண்டு அதானியின் சொத்து மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டது, ஆனால் புதிய ஆண்டு அவருக்கு சாதகமாக அமைய தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த கோடீஸ்வரர் அதானி தான்.
உலக கோடீஸ்வரர்களுக்கு புத்தாண்டு சிறப்பாக தொடங்கவில்லை. உலகின் முதல் 20 பில்லியனர்களில் மூவரின் சொத்து மதிப்பு மட்டும் அதிகரித்துள்ளது. அதானி மற்றும் அதானி தவிர, அமெரிக்காவின் மூத்த முதலீட்டாளர் Warren Buffett மட்டுமே இந்த ஆண்டு லாபத்தை பார்த்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Gautam Adani becomes Asia's Richest man, Mukesh Ambani Net worth, Gautam Adani net worth, Bloomberg Billionaires Index, Adani Groups