இலங்கையிடம் தடுமாறும் பாகிஸ்தான்: 10 ஓவரில் 28 ரன்..முக்கிய விக்கெட்டைத் தூக்கிய அசிதா
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
சைம் அயூப்
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
💔 SAIM FALLS 💔
— Rana Ahmed (@RanaAhmad056) November 11, 2025
The stylish left-hander departs — short of what could’ve been a big one!#SaimAyub #pakvsl pic.twitter.com/EoDN0aj3ds
ராவல்பிண்டியில் தொடங்கியுள்ள முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் (Saim Ayub) 6 (14) ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், அசிதா பெர்னாண்டோவின் பந்துவீச்சில் lbw முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து பாபர் அஸாம் (Babar Azam) களமிறங்க, இலங்கையின் துல்லிய பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி ஓட்டங்களை எடுக்க தடுமாறி வருகிறது.
அந்த அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்களே எடுத்திருந்தது. அதிரடி வீரரான சைம் அயூப் ஆட்டமிழந்தது பாகிஸ்தானின் துடுப்பாட்டத்திற்கு பெரிய அடியாகும். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |