2வது மனைவியுடன் தங்குவதற்கு அனுமதி கேட்டார்! தம்பதியே என் நிலைக்கு காரணம்... 2 இலங்கை கிரிக்கெட் வீரர்களிடையே முற்றும் மோதல்

Tthisara Perera Shehan Jayasuriy conflict Women matters Cricket and Life
By Balakumar Jan 19, 2021 05:25 PM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணியில் தான் விலகுவதற்கு திசர பெரேராவும், அவர் மனைவியும் தான் காரணம் என ஷெஹான் ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இரண்டு வீரர்களுக்கும் இடையே சமூகவலைதளத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய ஷெஹான் ஜயசூரிய அணியிலிருந்து விலகியதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்திருந்தது.

ஷெஹான் ஜயசூரிய தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்க தீர்மானித்துள்ள நிலையிலேயே, அவர் இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து விலகியதாக அந்த அமைப்பு கூறியது.

இந்த நிலையில், ஷெஹான் ஜயசூரியவிற்கும், திசர பெரேராவிற்கும் இடையில் மோதல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து தான் விலகுவதற்கு திசர பெரேராவும், அவரது மனைவியுமே காரணம் என ஷெஹான் ஜயசூரிய குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பெரேரா பேஸ்புக்கில் ஒரு பதிவை வெளியிட்டார்.

அதில், 2017ஆம் ஆண்டு துபாய் கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் போது ஷெஹான் ஜயசூரிய, அவரது இரண்டாவது மனைவியை அங்கு அழைத்து வந்த தமது அறையில் தங்க வைக்க வேண்டும் என முகாமையாளரிடம் கோரியதாக தெரிவித்துள்ளார்.

ஷெஹான் ஜயசூரிய ஏற்கனவே திருமணமாகி, ஒரு பிள்ளையின் தந்தை என்பதனை கருத்திற் கொண்டு, அணித் தலைவர் என்ற விதத்தில் தாம் அந்த கோரிக்கையை நிராகரித்திருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தாம் அன்று அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தால், இன்று அவர்களுக்கு ஹீரோவாக இருந்திருக்கக்கூடும் எனவும் பெரேரா தெரிவித்துள்ளார்.

திருமணமான ஆணொருவரை, மற்றுமொரு பெண்ணுன் தங்கும் விடுதி அறையில் தங்க வைப்பது தவறான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஷெஹான் ஜயசூரிய இது குறித்து கூறுகையில் நான் துபாய் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் போது, தமது முதலாவது மனைவியுடன் சட்ட ரீதியாக விவாகரத்தை பெற்றுக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விவாகரத்து விடயம் தொடர்பில் பெரேரா தமக்கு பல்வேறு இடையூறுகளை விளைவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் பெரேரா அணித் தலைவராக செயற்படவில்லை என கூறிய அவர், அந்த சுற்றுப் பயணத்தில் அஞ்சலோ மெத்திவ்ஸ்ஸே அணித் தலைவராக செயற்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

தாம் துபாயில் இருக்கும் போது, தமது காதலி தன்னுடன் அறையில் இருந்ததாக அவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளரிடம் போலி முறைப்பாடுகளை முன்வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரேரா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அவ்வாறான நபர்களே என ஷெஹான் ஜயசூரிய கூறுகின்றார். அதைவிடுத்து, வேறு நபர்களுக்கு உதவி செய்து, தாம் இந்த நிலைமைக்கு வரவில்லை எனவும் ஷெஹான் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமக்கு சந்தர்ப்பம் கிடைக்காததை அடுத்து, தாம் இலங்கையை விட்டு வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Gallery
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US