சிரியாவில் பதுங்கி இருந்து தாக்கிய அசாத் ஆதரவு படை: அஹ்மத் அல்-ஷாரா-வுக்கு புதிய நெருக்கடி
ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆதரவு படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 14 உள்துறை அமைச்சக அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
அசாத் ஆதரவாளர்கள் படை திடீர் தாக்குதல்
சிரியாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆதரவாளர்கள், நாட்டின் மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி 14 உள்துறை அமைச்சக துருப்புகளைக் கொன்றுள்ளனர்.
அசாத்தின் சிறுபான்மை அலாவைட் முஸ்லீம் பிரிவின் கோட்டையான டார்டஸ் என்ற மத்தியதரைக் கடல் துறைமுகத்திற்கு அருகே நடந்த இந்த சண்டையில் மேலும் 10 துருப்புக்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய நெருக்கடி
ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவி நீக்கத்திற்கு பிறகு சிரியாவின் உண்மையான தலைவராக அஹ்மத் அல்-ஷாரா அறிவித்துக் கொண்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி அசாத்தின் ஆதரவு படைகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி இருப்பது அஹ்மத் அல்-ஷாராவின் அதிகாரத்திற்கு இதுவே முதல் நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு பஷர் அல்-அசாத்தின் ஜனாதிபதி பதவி அல்-ஷாராவின் இஸ்லாமிய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) பிரிவின் தலைமையிலான கிளர்ச்சிப் படைகளிடம் வீழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |