டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூடு தாக்குதல் முயற்சி! சந்தேக நபர் அதிரடி கைது
டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி தாக்குதலுக்கு பிறகு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இருப்பதாக FBI தெரிவித்துள்ளது.
கொலை முயற்சி தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீது வெளிப்படையான கொலை முயற்சி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டு இருப்பதாக FBI தெரிவித்துள்ளது.
வெஸ்ட் பாம் கடற்கரையில் டிரம்ப் சர்வதேச கோல்ப் மைதானத்தில் டொனால்ட் டிரம்ப் விளையாடி கொண்டிருந்த போது கடுமையான துப்பாக்கிச் சூடு தாக்குதல் சத்தம் கேட்டது.
இதையடுத்து டிரம்புக்கு முன்பாக ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரகசிய சேவகர் ஒருவர், சுற்றுப்புற வேலியில் இருந்து துப்பாக்கி வெளியே வருவதை கண்டதாக பாம் பீச் கவுண்டி ஷெரீப் ரிக் பிராட்ஷா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தேக நபர் கருப்பு நிற காரில் ஏறிச் சென்று தப்பிக்க முயன்றதாகவும், இறுதியில் சந்தேக நபர் ஏகே-47 ரக துப்பாக்கி, ஸ்கோப், இரண்டு ரக்சாக்குகள் மற்றும் ஒரு கோப்ரோ ஒன்றுடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, அதிவேக துரத்தலை நாங்கள் விரும்பவில்லை என்பதால், போதுமான அலகுகள் வரும் வரை காத்திருந்து அமைதியான முறையில் சந்தேக நபரை காவலில் எடுத்து இருப்பதாக மார்ட்டின் கவுண்டியின் ஷெரிஃப் William Snyder விவரித்துள்ளார்.
டிரம்ப் அறிக்கை
துப்பாக்கி சூடு தாக்குதல் தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு மிகவும் அருகில் துப்பாக்கி சூடு தாக்குதலானது அரங்கேறியது, வதந்திகள் தேவையற்ற தகவல்கள் ஆகியவற்றை தடுக்க விரும்புகிறேன், எனவே நான் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இத்தகைய எந்தவொரு செயலும் என்னை மெதுவாக மாற்றாது, நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன், எனக்கு ஆதரவாக இருக்கும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும், ஒற்றுமை, அமைதி அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |