பிளைமவுத்தில் தாக்குதல்தாரிக்கு வலைவீச்சு: காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதி
பிரித்தானியாவின் பிளைமவுத்தில் தாக்குதல் காயங்களுடன் நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தாக்குதல்தாரியை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
பிளைமவுத் தாக்குதல்
பிரித்தானியாவில் புதன்கிழமை மாலை வெஸ்ட் ஹோ(West Hoe) பகுதியில் நடைபெற்ற கடுமையான தாக்குதல் தொடர்பாக பிளைமவுத் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு 8.55 மணிக்கு பலத்த காயமடைந்த ஒரு நபர் வெஸ்ட் ஹோ சாலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அவருக்கு சம்பவ இடத்திலேயே அவசர மருத்துவ உதவி வழங்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக டெரிஃபோர்ட்(Derriford) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, வெஸ்ட் ஹோ சாலை மூடப்பட்டது, மேலும் ஆண் சந்தேக நபரை தேடும் பணியில் டெவோன் மற்றும் கார்ன்வால் காவல்துறை அப்பகுதியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
தலைமை காவல் ஆய்வாளர் டேவ் பெப்வொர்த்(Dave Pebworth) கூறுகையில், "அப்பகுதியில் கணிசமான அளவு பொலிஸார் குவிந்துள்ளனர், மேலும் சந்தேக நபரை கண்டுபிடித்து கைது செய்ய விசாரணை தொடர்ந்து வருகிறது.
இந்த சம்பவம் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்று நாங்கள் நம்புகிறோம், பொது மக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை. விசாரணை தொடரும் வரை பொது மக்கள் நகரின் வெஸ்ட் ஹோ பகுதியை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |