ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிக்க முடியாது! அமெரிக்காவின் கருத்துக்கு ஜெலென்ஸ்கி பதிலடி
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ரஷ்ய பகுதிகளாக உக்ரைன் அங்கீகரிக்காது என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய பகுதியாக அங்கீகரிக்க முடியாது
உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ஒருபோதும் ரஷ்யாவின் பகுதிகளாக உக்ரைன் அங்கீகரிக்காது என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து நட்பு நாடுகளும் அழுத்தம் கொடுத்தாலும், உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்க உக்ரைன் உடன்படாது என்று தெரிவித்துள்ளார்.
Zelenskyy Ukraine will never recognize the occupied territories as part of Russia
— NEXTA (@nexta_tv) January 22, 2025
President Volodymyr Zelenskyy said that Ukraine would not agree to a compromise that would recognize the occupied territories as part of Russia, even under pressure from all allies.
Zelenskyy… pic.twitter.com/6wAYIvu2Ez
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் உக்ரைனிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் வரும் வரையிலும் அது ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய பகுதிகளாகவே இருக்கும் என்றும் ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கருத்துக்கு பதிலடி
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் இந்த கருத்தானது, அமெரிக்க செனட்டர் மார்கோ ரூபியோவின் அமைதி மற்றும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அமெரிக்க செனட்டர் மார்கோ ரூபியோவின் சமீபத்திய அறிக்கையில், ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உக்ரைன் சில சலுகைகளை வழங்க முன்வர வேண்டும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |