இந்தியாவில் வீடுகளில் குவிந்துள்ள தங்கம் - 10 நாடுகளின் மத்திய வங்கிகளை விட அதிகம்
இந்திய வீடுகளில் உள்ள தங்கம், உலகின் முதல் 10 நாடுகளின் மத்திய வங்கிகளில் உள்ள தங்க இருப்பை விட அதிகமாக உள்ளது என ASSOCHAM அமைப்பு தெரிவித்துள்ளது.
5 ட்ரில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம்
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,அதனை ஒரு ஆபரணமாக மட்டுமல்லாமல் முதலீடாகவே இந்தியர்கள் பார்த்து வருகின்றனர்.

இந்திய வீடுகளில் உள்ள தங்கம், உலகின் முதல் 10 நாடுகளின் மத்திய வங்கிகளில் உள்ள தங்க இருப்பை விட அதிகமாக உள்ளது என ASSOCHAM அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள வீடுகளில் சுமார் 5 ட்ரில்லியன் டொலர் மதிப்பிலான தங்கம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக தங்க கவுன்சிலின் அறிக்கையின் படி, இந்தியாவின் மத்திய வங்கியில் 850 டன் தங்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியாக இந்திய குடும்பங்களிடம் உள்ள தங்கத்தை படிப்படியாக நிதிச் சொத்துக்களாக மாற்றுவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் என கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 2 சதவீதம் வீட்டில் உள்ள தங்கத்தை ஒவ்வொரு ஆண்டும் நிதி சந்தைக்குள் கொண்டு வந்தால், 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஜிடிபியில் கூடுதலாக 7.5 டிரில்லியன் டொலர் சேரும்.

2047 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 34 ட்ரில்லியன் டொலராக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தங்கத்தை முறையாக பயன்படுத்தினால் அது 41.5 டிரில்லியனாக உயரும்.
தங்கத்தை பணமாக்குவது, நகை கடன்,தங்க சேமிப்பு திட்டம் போன்றவற்றின் மூலம், இந்த தங்கத்தை முறையாக பயன்படுத்தும் போது, அதை உற்பத்தி, உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீடாக மாறும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |