அதிக வேகத்தில் பூமியை நெருங்கும் 620 அடி உயர சிறுகோள்.., எச்சரிக்கை விடுத்த நாசா
620 அடி உயரமான கட்டிடத்தின் அளவுள்ள சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கவுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை நாசா தெரிவித்துள்ளது.
பூமியை நெருங்கும் சிறுகோள்
பூமிக்கு அருகில் உள்ள ஒரு குறிப்பிடத்தக்க சிறுகோள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA) அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
2024 JV33 என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் பூமியில் இருந்து தோராயமாக 2,850,000 மைல்கள் தொலைவில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறுகோள் 620 அடி உயரமான கட்டிடத்தின் அளவுள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது. இது பூமியின் சுற்றுப்பாதையை அடிக்கடி கடப்பதற்காக அறியப்பட்ட சிறுகோள்களின் வகையாகும்.
ஒரு மணி நேரத்திற்கு 24,779 மைல் வேகத்தில் விண்வெளியில் பயணிக்கும் இந்த சிறுகோள், சந்திரனை விட மூன்று மடங்கு தொலைவில் இருந்தாலும் பூமிக்கு நெருக்கமாக வரும்.
பூமியை நெருங்கி வரும் இந்த சிறுகோளை நாசா உன்னிப்பாக தொடர்ந்து கவனித்து வருகிறது. இந்த 2024 JV33 என்ற சிறுகோள் கணிசமான தூரத்தில் இருந்தாலும் பூமிக்கு அருகில் உள்ள பொருளாக (NEO) வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு கவனமாக கண்காணிப்பு தேவைப்படுகிறது. பல்வேறு விண்வெளி நிறுவனங்களுடன் நாசா இணைந்து, பூமிக்கு அருகில் உள்ள பொருட்களைக் கண்காணிக்க தொலைநோக்கிகள் மற்றும் மேம்பட்ட கணினி அமைப்புகளின் அதிநவீன நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |