உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெற போகிறோம்! AstraZeneca நிறுவனம் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் திரும்ப பெறவுள்ளதாக அஸ்ட்ரா ஜெனிகா (AstraZeneca) நிறுவனம் அறிவித்துள்ளது.
பக்கவிளைவுகள்
சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன.
அந்தவகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாக்கான தடுப்பூசியை உருவாக்கின.
இந்த தடுப்பூசியானது கோவிஷீல்டு (Covishield ) என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் போடப்பட்டது.
அந்தவகையில், இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
தற்போது, கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரும்ப பெறும் நிறுவனம்
கோவிஷீல்டு மருந்தால் இரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் ஒப்புக்கொண்டது.
இதையடுத்து, கொரோனா தடுப்பூசியால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்று உலகின் பல்வேறு பகுதிகளில் வழக்குகள் பதியப்பட்டது.
குறிப்பாக, 50 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் விரைவில் விசாரிக்க உள்ளது.
இந்நிலையில் தான், கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் திரும்ப பெறவுள்ளதாக அஸ்ட்ரா ஜெனிகா (AstraZeneca) நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து தடுப்பூசியின் தேவை சந்தையில் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.
எனவே, ஐரோப்பாவிற்குள் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கான சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை திரும்பப் பெறுகிறோம் என்று அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |