ட்ரம்பின் எதிர்காலம் குறித்து நாடி ஜோதிடர் கூறும் நம்ப முடியாத விடயம்
ட்ரம்பின் வாழ்வில் நம்ப முடியாத ஒரு விடயம் நடக்கும் என கணித்துள்ளார் நாடி ஜோதிடர் ஒருவர்.
ட்ரம்பின் எதிர்காலம்...
எலிசபெத் மகாராணியாரின் மரணம், பிரெக்சிட், 2016ஆம் ஆண்டு ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானது முதலான பல்வேறு விடயங்களை துல்லியமாக கணித்ததால் புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுகிறார் கிரெய்க் ஹாமில்ட்டன் பார்க்கர் (Craig Hamilton-Parker).

பார்க்கர், இந்திய ஜோதிட முறையான நாடி ஜோதிடத்தின் அடிப்படையில் எதிர்காலம் குறித்துக் கணிப்பவர் ஆவார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து, சாத்தியப்படாத ஒரு விடயத்தை கணித்துள்ளார் பார்க்கர்.
ஆம், ட்ரம்ப், மூன்றாவது முறையாக அமெரிக்காவின் ஜனாதிபதியாவார் என கணித்துள்ளார் பார்க்கர்.
அமெரிக்க அரசியல் சாசனத்தின்படி, ஒருவர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதியாக முடியாது.

ஆனால், ஒரு முக்கிய விடயம் நடக்கும், அது ஒரு பெரிய பிரச்சினையாக வெடிக்கும். அதன் காரணமாக, மூன்றாவது முறையாக ட்ரம்ப் ஜனாதிபதியாவார் என்கிறார் பார்க்கர்.
கிரீன்லாந்து ஊடுருவல் நடக்குமென்றோ, வெனிசுலாவில் நடந்ததுபோல ஒரு நாட்டுக்குள் நுழைந்து அந்த நாட்டின் தலைவரையே தூக்கிக்கொண்டு வரமுடியும் என்றோ யாராவது நினைத்தார்களா என கேள்வி எழுப்புகிறார் பார்க்கர்.
ஆக, எதுவும் சாத்தியமே, உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. சட்டங்களை எல்லாம் தலைகீழாக மாற்றும் ஒரு பெரிய விடயம், பிரச்சினை நடக்கும், அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ட்ரம்ப் ஜனாதிபதியாவார் என்கிறார் பார்க்கர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |