விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் தொடர்பில் ஒரு முக்கிய செய்தி
விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ள சுனிதா
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக வீரரான Butch Wilmore ஆகிய இருவரும், ஜூன் மாதம் 5ஆம் திகதி, போயிங் நிறுவனத்தின் Starliner என்னும் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தார்கள்.
அவர்கள் பயணித்த விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து அதை சரி செய்யும் முயற்சியில் தொழில்நுட்பக் கலைஞர்கள் இறங்கினார்கள். ஆனால், அதை அவர்களால் இதுவரை சரி செய்யமுடியவில்லை.
அதனால், விண்வெளிக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய சுனிதா வில்லியம்ஸும் Butch Wilmoreம், தற்போதுவரை சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் திகதியே பூமிக்குத் திரும்பியிருக்கவேண்டிய சுனிதாவும் Wilmoreம், அடுத்த ஆண்டு, அதாவது, 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வரை, பூமிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என ஒரு தகவல் வெளியானது.
மேலும் ஒரு மோசமான தகவல்
ஆனால், தற்போது சுனிதா பூமிக்குத் திரும்புவது தொடர்பில் மேலும் ஒரு மோசமான செய்தி வெளியாகியுள்ளது.
ஆம், சுனிதாவும் Wilmoreம், 2025ஆம் ஆண்டு, மார்ச் மாத இறுதி அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில்தான் பூமிக்குத் திரும்புவார்கள் என தற்போது நாசா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |