ஆடுமாடுகளைப் போல நடத்தப்படுகிறார்கள் புகலிடக்கோரிக்கையாளர்கள்: கண்ணால் கண்ட பெண்கள் தகவல்
இங்கிலாந்தில் மிதவைப்படகில் அடைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆடுமாடுகளைப்போல நடத்தப்படுவதாக, அங்கு முன்னர் பணியாற்றிய பெண்கள் இருவர் தெரிவித்துள்ளார்கள்.
மிதவைப்படகில் அடைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள்
இங்கிலாந்திலுள்ள Dorset என்னுமிடத்தில், Bibby Stockholm என்னும் மிதவைப்படகு நிறுத்தப்பட்டுள்ளது. அதில் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர் அடைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பலரை அங்கு அடைக்க திட்டமிடப்படுவருகிறது.
அந்தப் படகில் அடைக்கப்பட்டிருந்த Leonard Farruku (27) என்னும் புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த படகில் காணப்படும் மோசமான சூழல் வெளியுலகுக்குத் தெரியவந்தது.
Photograph: Peter Flude/The Guardian
ஆடுமாடுகளைப் போல நடத்தப்படுகிறார்கள்
இந்நிலையில், அந்த மிதவைப்படகில் வேலை செய்த இரண்டு பெண்கள், அங்கு புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆடுமாடுகளைப் போல நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்கள். Levana Coker என்னும் பெண் அந்தப் படகில் housekeeper ஆகவும் Bella Basstone ரிசப்ஷனிஸ்ட் ஆகவும் பணியாற்றியுள்ளார்கள்.
சரியாக வேகாத அல்லது பூஞ்சை பிடித்த உணவு, மூட்டைப்பூச்சிகள், படுக்கை பற்றாக்குறை, படுக்க நீளம் போதாத படுக்கைகள், அவ்வப்போது படகுக்குள் வந்துவிடும் தண்ணீர் என அங்கு மோசமான சூழல் நிலவும் நிலையில், உள்துறை அலுவலக அதிகாரிகளோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ வரும்போது மட்டும், படகை சுத்தமாக்கி, அன்று மட்டும் படகில் தங்கியிருப்பவர்கலுக்கு நல்ல உணவு பரிமாறப்படும் என்றும், ஊடகவியலாளர்கள் வந்தால், அவர்களுக்கு சில நல்ல அறைகள் மட்டுமே காட்டப்படும் என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.
Photograph: Peter Flude/The Guardian
அங்கு வரும்போது மகிழ்ச்சியுடன் வருபவர்கள் கூட, அங்கு வந்து சில நாட்களில் சோர்ந்துபோவதையும், குறிப்பாக தாங்கள் ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சம் காரணமாக கடும் மன அழுத்தத்திற்குள்ளாகி, தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதையும் பார்த்ததாகத் தெரிவிக்கிறார்கள் Levanaவும் Bellaவும். அந்த மிதவைப்படகு ஒரு சிறை போலிருப்பதாக அங்கு தங்கியிருப்பவர்கள் கருதுவதாக தெரிவிக்கும் இருவரும், அது மூடப்படவேண்டும் என்கிறார்கள். ஆனால், வழக்கம்போல, உள்துறை அலுவலகம் எல்லாம் நன்றாகவே இருப்பதாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |